ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் நவராத்திரி உற்ஸவம் தொடக்கம்
ADDED :1822 days ago
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் காப்புக்கட்டுதல் பூஜையுடன் துவங்கியது. மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன்,மஞ்சமாதா, சங்கரன், சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.கோயில் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டது. மாலையில் சக்தி ஸ்தோத்திரம், பஜனை நடந்தது. நிறைவு நாளன்று ஐயப்பன் அம்பு விடும் நிகழ்ச்சியில் வெளிப்பிரகார வீதியுலாவிற்கு பதிலாகஉள்வீதியுலா நடக்க உள்ளது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் சாமி செய்திருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.