மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி மஹோற்சவம்
ADDED :1819 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் அருளிய கோலாத்தில் சுவாமி அருள்பாலித்தார். அரபு நாட்டிலிருந்து வந்திரங்கிய குதிரைகளை வாங்கச்சென்ற பாண்டிய மந்திரியான வாதவூர் அடிகளை தடுத்தாட்கொண்டு ஞானோபதேசம் செய்து மாணிக்கவாசகராக மிளிர அருளிய திருக்கோலத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.