மாமல்லபுரம் கோவில்களில் நவராத்திரி உற்சவம்
ADDED :1819 days ago
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பகுதி கோவில்களில், நவராத்திரி உற்சவம் துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி மாரிசின்னம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, உற்சவம் துவங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தசரா அவதார திருக்கோல அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர், கருக்காத்தம்மன் கோவில்களிலும், 26ம் தேதி வரை, தினம் ஒரு திருக்கோல அலங்காரத்துடன், சுவாமி எழுந்தருளி, உற்சவம் நடக்கிறது. சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள் கோவிலில், தினமும், மாலை, ஊஞ்சல் சேவை நடக்கிறது.