உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு பாதயாத்திரை

திருப்பதிக்கு பாதயாத்திரை

 விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை கிராமத்திலிருந்து பஜனை குழுவினர் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணையை சேர்ந்த ஸ்ரீதேவி ,பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பஜனை குழுவினர் புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை குழு தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆஞ்நேயர், நரசிம்மர் வேடமணிந்து பஜனை பாடல்களை பாடியபடி பாதயாத்திரை புறப்பட்டனர் . வேம்பி, ஆசூர், சாத்தனுார் வழியாக விக்கிரவாண்டி வந்து பின்னர் வெள்ளிமேடு பேட்டை வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !