திருக்கழுக்குன்றத்தில் கன்னியா பூஜை
ADDED :1810 days ago
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், நவராத்திரியை முன்னிட்டு, 28ம் ஆண்டு, கன்னியா பூஜை நடந்தது.இதில், ஒன்பது பெண் குழந்தைகள் அலங்காரம் செய்யப்பட்டு, அவர்களுக்கு, மஞ்சள் பூசி, குங்குமமிட்டு பாத பூஜை செய்யப்பட்டது.பின், ஒவ்வொருவருக்கும் வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், பிரசாதம் அடங்கிய தாம்பூலம் தொகுப்பினை வழங்கினர்.இதில், பங்கேற்ற பெண் குழந்தைகளிடம், பெண்கள் பலரும் வணங்கி ஆசி பெற்றனர்.