உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

திருவண்ணாமலை: கொரோனா பரவலால், திருவண்ணாமலை, யோகிராம் சுரத்குமார் ஆஷ்ரமத்தில், நவராத்திரி விழா எளிமையாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள, யோகி ராம்சுரத்குமார் ஆஷ்ரமத்தில், நவராத்தி விழாவின்போது, ஆண்டுதோறும் வழக்கமாக, 1,000த்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா பரவல் சூழ்நிலையில், கூட்டம் கூடக்கூடாது என்பதால், எளிமையாக கொலு வைத்து, நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதில், மகான்கள், அம்பாள், மும்மூர்த்திகள், அம்மன் விக்ரஹம் வைக்கப்பட்டுள்ளன. கொலு வீற்றிருக்கும் அம்மனுக்கு, நாள்தோறும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் மூன்று நாட்கள், துர்க்கை அலங்காரமும், அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி அலங்காரமும், கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிதேவி அலங்காரமும் செய்யப்படுகிறது. நாள்தோறும் அதிகாலை, 4:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை செய்யப்பட்டு, ஸ்தோத்திரம், லலிதா நவரத்தின மாலை பாடல்கள் பாடப்பட்டு, காலை மற்றும் மாலையில் அம்பாளுக்கும், பகவானுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !