விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2087 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.