திருமலை பிரம்மோற்சவம்: சந்திர, சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1857 days ago
திருப்பதி : திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான இன்று இரவு சந்திர பிரபை வாகனத்திலும் காலை சூரிய பிரபை வாகனத்திலும் உற்சவரான மலையப்பசுவாமி உலா வந்தருளினார்.
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. மிகப்பிரம்மாண்டமாக மக்கள் திரளின் நடுவே நடைபெற வேண்டிய விழா கொரோனா தொற்று பரவிவிடக்கூடாது என்பதற்காக கோவிலுக்குள் நடக்கிறது. விழாவினை நடத்தும் அர்ச்சகர்களும் அதிகாரிகளும் மட்டும் கலந்து கொள்கின்றனர் பக்தர்கள் தேவஸ்தான டி.வி.,யின் மூலம் பார்த்து வருகின்றனர். ஏழு குதிரை பூட்டிய வாகனத்தில் பிரகாசிக்கும் சூரியனின் பின்னனியுடன் எழுந்தருளிய மலையப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.இரவு இதே போல சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.