மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி அம்மன்
ADDED :1854 days ago
தஞ்சை : நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று, தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் பெரியநாயகி அம்மன், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.