வீட்டில் சரஸ்வதி பூஜை
ADDED :1864 days ago
பூஜையறையை சுத்தப்படுத்தி சரஸ்வதி படத்தை வெண்தாமரை அல்லது வெள்ளை நிற பூக்களால் அலங்கரியுங்கள். சரஸ்வதியின் அருகில் சாணப் பிள்ளையார் வைத்து விளக்கேற்றுங்கள். ஒருபுறம் புத்தகங்களையும், மறுபுறம் சுண்டல், பொங்கல், அவல், பொரி, கடலை, சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களையும் வையுங்கள். சரஸ்வதி போற்றி, அந்தாதி, சகலகலாவல்லி மாலை பாடல்களைப் பாடிய பின் தீபாராதனை காட்டி வழிபடுங்கள்.