பீளமேடு: கோவை, காளப்பட்டி ராஜ்கண்ணன் கார்டனில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவில், மகாசம்ப்ரோக்ஷண விழா, நேற்று நடந்தது. விழா கடந்த 21ம் தேதி, பகவத் அனுக்ஞையுடன் துவங்கியது. மாலையில் யாகசாலை பிரவேசம், திவ்ய பிரபந்த வேத பாராயணங்கள், ஹோமங்கள், சாற்றுமுறை நடந்தது. விஸ்வரூபம், தீருவாரனம், திருமஞ்சனம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று திருவாராதனம், ஹோமங்கள், பாராயணங்கள், கும்பங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடந்தன. திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்ம ஐயங்கார் தலைமையில், சீனிவாச பெருமாள் மகாசம்ப்ரோக்ஷண விழா நடந்தது.விழாக்குழு தலைவர் வெங்கிடபதி, விழாக்குழுவினர் ரகுபதி, குணசேகரன், சுந்தரம், ரங்கநாதன், கோவர்த்தனன், வெங்கிடபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.