திண்டுக்கல்: வேடபட்டி முத்துமாரியம்மன், விநாயகர், பாலமுருகன் கோயில் வைகாசி உற்சவ விழா நடந்தது. சுவாமி சாட்டுதலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முத்துமாரியம்மன் கோயில், அன்னை வேளாங்கன்னி கோயில், பள்ளிவாசல் பெரிய தனக்காரர்கள் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு அம்மனுக்கு பொட்டுத்தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.கரகம் ஜோடித்து நகர்வலம் வந்தது. நேற்று காலை மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ் ச்சிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகள் நடந்தன. இன்று முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.