கட்டிய நல்லூரில் நாளை செடல் உற்சவம்
ADDED :4916 days ago
மங்கலம்பேட்டை : கட்டியநல்லூர் கஸ்தூரி மாரியம்மன் கோவிலில் நாளை (25ம் தேதி) செடல் உற்சவம் நடக்கிறது.மங்கலம்பேட்டை அடுத்த கட்டியநல்லூர் கஸ்தூரி மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. வரும் 25ம் தேதி மாலை 3 மணியளவில் செடல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கட்டியநல்லூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.