மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா
ADDED :4900 days ago
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில் நடந்த மண்டகப்படி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 18ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 20ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கரூர் நகராட்சி ஊழியர்கள் சார்பில் 36ம் ஆண்டு மண்டகப்படி விழா மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. காலை 7.15 மணிக்கு பல்லாக்கு ஊர்வலமும், 10.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. மதியம் கோவில் கட்டிடத்தில் நடந்த அன்னதான விழாவை நகராட்சி தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் ராஜா, அ.தி. மு.க., கவுன்சிலர்கள் விசாகன், கமலா, பிரபு பங்கேற்றனர்.