உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானியார் குடியிருப்பு கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

ஞானியார் குடியிருப்பு கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

உடன்குடி : உடன்குடி அருகே ஞானியார்குடியிருப்பு உச்சினிமாகாளியம்மன், பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா துவங்கியது. நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. ஞானியார்குடியிருப்பு உச்சினிமாகாளியம்மன், பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்கிறது. இவ்விழா நேற்று காலை 6.30 மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், காலை 7 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், தேவதாஅனுக்ஞை, காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, லஷ்மி பூஜை, காலை 10.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், பாலிகா ஸ்தாபனம் ரஷா பந்தனம், இரவு 7 கும்ப அலங்காரம் கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், இரவு 8.30 மணிக்கு 1ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், இன்று காலை 8 மணிக்கு திருமுறை பாராயணம், விசேடசந்தி பூதசுத்தி, பகல் 9.30 மணிக்கு 2ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாக பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ரத்னந்யாசம், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், நாளை காலை 5.30 மணிக்கு மங்களவாத்தியம், திருமுறை பாராயணம், காலை 6.30 மணிக்கு பிம்ப சுத்தி ரஷாபந்தனம், 4ம் காலயாக பூஜையும், காலை 8 மணிக்கு ஸ்பர்சாகுதி நாடி சந்தானம், காலை 9 மணிக்கு த்ரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி தீபாராதனையும், யாத்திராதானம், பகல் 9.30 மணிக்கு கும்பம் எழுந்தருளல், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் வருகை தருவர். பகல் 11 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அன்னதானமும், தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !