சதுரகிரி மலையில் நவராத்திரி விழா
ADDED :1870 days ago
வத்திராயிப்பு : சதுரகிரியில் நடந்த நவராத்திரி விழா அம்புவிடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நடந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். மதியம் பூஜை பின் அம்மன் வீதியுலா வர பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன்பின் ஆற்றங்கரை நடுவில் இருந்த மகிசாசுர அரக்கனை அம்மன் அம்பு எய்து அழித்தார். இதை தொடர்ந்து அம்மன் மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.