இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் அம்பு எய்தும் நிகழ்ச்சி
ADDED :2158 days ago
மதுரை: மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்பாள் அம்பு எய்தும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.