விருதுநகரில் விஜயதசமி மகரநோன்பு
ADDED :1817 days ago
விருதுநகர் : விஜயதசமி மகர நோன்புவை யொட்டி விருதுநகர் வெயிலுகந்தம்மன், சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி கோயில் வளாகங்களில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக கே.வி.எஸ்., பள்ளி அருகே தேவஸ்போர்டு நந்தவனத்தில் நடக்கும் இத்திருவிழா கொரோனாவால் எளிய முறையில் நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க பக்தர்கள் சமூக இடைவெளியில் தரிசித்தனர்.