திருவேங்கிடபுரத்தில் நவராத்திரி விழா
ADDED :1892 days ago
பொன்னே : தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, சிறுமியர் விளக்கு பூஜை செய்து சரஸ்வதியை வழிபட்டனர். பொன்னேரி, திருவேங்கிடபுரம், ஸ்ரீதேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் நேற்று, 34ம் ஆண்டு, நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.விழாவில், சிறுமியர்கள், சரஸ்வதி பக்தி பாடல்களை பாடி விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.ஆலய அர்ச்சகர் பாலாஜி சர்க்கார் மற்றும் குழுவினர், ஸ்லோகங்கள், பக்தி பாடல்கள் பாடினர்.நவராத்திரி சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சிறுமியர், பெண்கள் பங்கேற்று, தேவி கிருஷ்ணமாரியம்மனையும், சரஸ்வதி அம்மனையும் வழிபட்டு சென்றனர்.