மகா மாரியம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
ADDED :1817 days ago
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், மகாமாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 17ல் துவங்கியது. தினமும் மாரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல் நாளில் தங்க கவசம், இரண்டாம் நாளில், வெள்ளி கவசம், கருமாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், சிருவாச்சூர் மதுரைகாளியம்மன், துர்கைஅம்மன், துர்கா சரஸ்வதி, வித்யாலட்சுமி ஆகிய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கடைசி நாளான நேற்று, கூத்தனூர் சரஸ்வதிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி கொலுவில், பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, மரப்பாச்சி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இது, பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள், மகாமாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.