உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்

பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்

 காரைக்கால்; மேலகாசாகுடி பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.காரைக்கால் அடுத்த மேலகாசாகுடியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன், செல்வவிநாயகர், விஸ்வநாதர், பெத்தாரணசாமி, ஐயனார் மற்றும் பரிவார கோவில்களுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதற்கான பூஜை கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முதல் கால யாக பூஜை கடந்த 24ம் தேதி துவங்யது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை முடிந்து பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஓமலிங்கம், ஆலோசனைக்குழு இளங்கோவன், விழாக்குழு தலைவர் ரவி, நாகராஜன், சாமிநாதன், மகேஷ்குமார், வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !