பாதாளகாளி கோவிலில் மாசி அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :8 minutes ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டன. 2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு கலச அபிஷேகம் ந டந்தது. மாலை 3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.