உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவில்லாமலா ராமர் கோவில் பாதாள அறையில் பொக்கிஷங்களா?

திருவில்லாமலா ராமர் கோவில் பாதாள அறையில் பொக்கிஷங்களா?

திருவில்லாமலா: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில், விலைமதிக்க முடியாத அரிய வகை பொக்கிஷங்கள் இருந்ததைப் போல, திருச்சூர் அருகே திருவில்லாமலா ராமர் கோவிலிலும், பூமிக்கடியில் மரத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அறைக்குள் விலை மதிக்க முடியாத அரிய பொருட்கள் இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இதனால், கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டம் திருவில்லாமலா பகுதியில், 600 ஆண்டு பழமையான ராமர் கோவில் உள்ளது. இங்கு மரத்தினாலான பாதாள அறை ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதாள அறையிலும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்ததைப் போல, ஏராளமான தங்க, வைர நகைகள் மற்றும் சிலைகள் இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இதனால், மாநில அரசின் உத்தரவின்பேரில், முதல் கட்டமாக கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதாள அறை குறித்து, கோவில் மேலாளர் ரமாதேவி கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன், பாதாள அறையை திறந்து பார்க்க, தொல்லியல் துறை மற்றும் கோவில் அதிகாரிகள் பல முறை முயன்றும் முடியவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன், திப்புசுல்தான் படையெடுத்து வந்த போது, பல அரிய வகை பொருட்கள், கோவிலின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். கோவில் பிரகார சுற்றுப்பகுதியில், வலது பக்கத்தில் தான் பாதாள அறை துவங்குகிறது. பத்தடி நீளமும், அதே அளவு அகல ஆழத்தில், ஒரு மீட்டர் நீள அகலம் கொண்டு உறுதி மிக்க மரத்தினால் பாதாள அறை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !