வைத்தியநாத சுவாமி கோயில் தேர்திருவிழா: இன்று துவக்கம்!
ADDED :4881 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி தேர்திருவிழா இன்று (மே25) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி காலை 9.15 மணிக்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு வெட்டி வேர், சப்பரத்தில் சுவாமி வலருதல் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நடக்கிறது. 5ம் நாள் இரவு பூச்சப்பரகாட்சி நடக்கிறது. விழா நாட்களில் இரவு சமய சொற்பொழிவு, 7ம் நாள் மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், ஜூன்2ம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் செய்து வருகின்றனர்.