கனிவுடன் பேசுங்கள்
ADDED :1912 days ago
ஒருமுறை நாயகத்தை சந்திக்க வீட்டுக்கு வெளியே காத்திருந்தார் ஒரு மனிதர். அதை அறிந்ததும், ‘‘ இவர் அவ்வளவு நல்லவர் இல்லை, இருந்தாலும் உள்ளே வரச் சொல்லுங்கள்’’ என்றார். சிறிதுநேரம் பேசி விட்டு வழியனுப்பி வைத்தார். அவர் சென்ற பிறகு,‘‘அந்த மனிதரை நீங்கள் விரும்பாத நிலையிலும், கனிவுடன் பேசினீர்களே... எப்படி?’’ எனக் கேட்டார் ஆயிஷா.
‘‘இறைவனின் பார்வையில் கெட்டவர் யார் தெரியுமா? மற்றவர் உறவாட இடம் தராமல் கடுமையாக பேசுபவன் தான். ஆகவே அனைவரிடமும் கனிவுடன் பேசுவது அவசியம்’’ என விளக்கம் அளித்தார்.