சக்தி பூமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1804 days ago
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பேரூராட்சி அன்னை சத்யா தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி பூமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.அதனையொட்டி கடந்த 17ம் தேதி மகா கணபதி ஸ்ரீ சக்தி பூமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை வழிபாட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது. அன்று அம்மன் அங்காள பரமேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து தினமும், அபிராம சுந்தரி, மகா தனலட்சுமி, ராஜராஜேஸ்வரி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி, வைஷ்ணவி, அன்னபூரணி, சரஸ்வதி, மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் இரவு அன்னைதேவி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நவராத்திரி விழா நிறைவு பெற்றது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.