உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரத்தில் ஆன்மீக நூல்கள் வெளியீடு

தருமபுரத்தில் ஆன்மீக நூல்கள் வெளியீடு

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞான புரீஸ்வரர் சுவாமி மற்றும் ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ தர்மபுரிஸ்வரர் சுவாமி திருக்கோயில்களின்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று தருமபுரத்தில் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஶ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா மற்றும்  சிவபோகசாரம் ஆகிய இரு ஆன்மீக நூல்களை திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட முதல் பிரதியை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர்.  இராம. சேயோன்  பெற்றுக்கொண்டார். விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீன குருமகா சன்னிதானம், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு  சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்  எஜமான் ஸ்ரீ முத்துக்குமார தம்பிரான்  சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீமத்  அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான்கள்  மற்றும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் காறுபாறு தம்பிரான்  ஸ்ரீமத் சபாபதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !