உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை தர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை தர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோயில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.


மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர், அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் சுவாமி கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று 29ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. அதனைதொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு நான்காம் காலயாகசாலைபூஜை தொடங்கி காலை 9 மணிக்கு பூர்ணாஹுதியாகி  கடம்புறப்பட்டு கோயிலை வலம்வந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலை 9.40 மணிக்கு ஞானபுரீஸ்வரர் கோயில் குப்பாபிஷேகமும்,  தர்மபுரீஸ்வரர் கோயில் 10.20மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் திருப்பனந்தால் ஆதினம் முத்துக்குமாரசுவாமி  தம்பிரான்சுவாமிகள் உட்பட திரளான பக்தர்ள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !