உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி 6ம் ஆண்டு துவக்க விழா

வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி 6ம் ஆண்டு துவக்க விழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் குமாரவலசு, சாலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி ஆலயத்தின் பிரதிஷ்டை செய்வித்து, ஐந்தாண்டு நிறைவுற்று 6ம் ஆண்டு துவக்க விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. துவக்க விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார சுவாமிகள் அபிஷேகம், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது, தொடர்ந்து சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம், மதியம் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !