ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1899 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூ.32 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஜூன் 16 க்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியலை கோயில் ஊழியர்கள் திறந்தனர். கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் எண்ணினர். இதில் ரொக்க பணம் ரூ.32 லட்சத்து 35 ஆயிரத்து 691 ரூபாயும், தங்கம் 80 கிராம், வெள்ளி 217 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதில் கோயில் உதவி ஆணையர் ஜெயா, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின்,பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், பலர் பங்கேற்றனர்.