உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம்

திருவண்ணாமலையில் ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம்

திருவண்ணாமலை : ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர் அண்ணாமலையார் கோவிலில், சுவாமி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக அலங்காரம் என்பதால் நேற்று, மாலை வரைக்கும்  கோவில் மூடப்பட்டதால் ஏராளமான  பக்தர்கள் திருமஞ்சன கோபுர வீதியில்  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  ராஜகோபுரம் அருகே கல்யாண சுந்தரேசர்  அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !