சபரிமலையில் தரிசனத்திற்கான ஆன்லைன் பதிவு முதல் நாளிலேயே நிறைவு
ADDED :1856 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கிய முதல் நாள் அன்றே நிறைவடைந்தது.
உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசன் வருகிற 16ம் தேதி துவங்கியதை முன்னிட்டு 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கொரோனா பரவலால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவிதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் தேவஸ்தானம் விதித்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது. துவங்கிய முதல் நாள் அன்றே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.