கோவில் நிலத்தை மீட்க திரண்ட மக்கள்
திருப்பூர் : ஆயுதப்படை போலீஸ் அலுவலகம் கட்ட, ஒதுக்கப்பட்ட கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பூரில், ஆறு மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 10 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவை, அப்பகுதியினர் கொண்டாடி வருகின்றனர்.தற்போது அந்த இடம், மாநகர ஆயுதப்படை அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்ட ஒதுக்கப்பட்டது. கோவில் நிலத்தை, கோவிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர், மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையம் பிரிவில், நேற்று காலை, 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
கோவை காமாட்சிபுரி ஆதினம், சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆறு மணி நேரம் நடந்த போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கோவில் மீட்புக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் பேசி தீர்வு காணலாம் என போலீசார் அறிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.போராட்டம் தொடரும்ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது;தமிழகம் முழுதும் பல இடங்களில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.