உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளநகர் கோவிலில் சனி பகவான் கற்சிலை கண்டெடுப்பு

விளநகர் கோவிலில் சனி பகவான் கற்சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறை: விளநகர் கோயில் வன்னி மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட சனி பகவான் கற்சிலையை தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் பார்வையிட்டு வழிபட்டார்.

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் அருள்மிகு துறைகாட்டும் வள்ளார் கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோவி ல் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம் பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கோயில் வன்னி மரத்தடியில் தென்னங்கன்று நடுவதற்காக கோவில் ஊழியர்கள் குழி தோண்டியுள்ளனர.; அப்போது சனி பகவான் கற்சிலை ஒன்று தென்பட்டது. அந்த சிலையை கோவில் நிர்வாகத்தினர் பத்திரமாக எடுத்தனர். இதனையறிந்த குருமகா சன்னிதானம் அங்குவந்து சனி பகவான் கற்சிலையை பார்வையிட்டதுடன், அதனை அங்கேயே பிரதிஷ்டை செய்ய சொல்லி அருளினார். தொடர்ந்து அச்சிலை அங்கு மேடை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை

செய்யப்பட்டது. தொடர்ந்து சனிபகவானை தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானம் வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !