ஜன. 25ல் ஜெனகை மாரியம்மன் கும்பாபிஷேகம்
ADDED :1799 days ago
சோழவந்தான் : சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் சுப்ர மணியன், மணி முத்தையா முன்னிலை வகித்தனர். ஜன.,25ல் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. துணைத் தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.