திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED :1799 days ago
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், பக்தர்கள் வழிபாடு செய்தனர்.திருப்போரூரில், பிரசித்தி பெற்ற, கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது.விழாவில், பக்தர்கள்பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தினர். சரவணப் பொய்கை குளத்தில் நீராடி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.கோவிலின் கிழக்கு பக்கம், 16 கால மண்டபம் அருகே, வெளிப்புற வளாகத்தில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.