கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு அஞ்சலி
ADDED :1799 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல்லில் திருச்சி ரோடு கல்லறை மைதானத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களின் நினைவிடங்களை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு கத்தோலிக்க பிஷப் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சின்னாளபட்டி: ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார் பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள், முன்னோர்களின் நினைவிடங்களில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி நிறைவேற்றல், பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தது. கன்னிவாடி, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டிலும் வழிபாடுகள் நடந்தது.