பிரவுசிங் மையங்களில் சபரிமலை தரிசன புக்கிங்
செம்பட்டி : செம்பட்டி, சின்னாளபட்டி தனியார் பிரவுசிங் மையங்களில், சபரிமலை தரிசன புக்கிங் மும்முரமாக நடக்கிறது.
கார்த்திகை 1 முதல் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்குவது வழக்கம். கொரோனா பரவல் எதிரொலியாக சபரிமலை தரிசனத்திற்கு, ஆன்-லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறுவது அவசியம். இதனால் மாலை அணியும் முன்னரே, தரிசன நாளை தேர்வு செய்து விண்ணப்பிக்க பலர் தனியார் பிரவுசிங் மையங்களில் குவிகின்றனர். இதனால் செம்பட்டி, சின்னாளபட்டி, கொடைரோடு பகுதிகளில் ஐயப்ப தரிசன பதிவு களை கட்டியுள்ளது. பிரவுசிங் மைய உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ஆதார், சுகாதாரத்துறை சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன், தேவஸ்தான இணையதள விண்ணப்ப பதிவு நடக்கிறது. தினமும் ஆயிரம் பேர், சனி, ஞாயிறுகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பெருமளவு பக்தர்கள் மண்டல பூஜை தரிசனத்தையே விரும்புகின்றனர் என்றார்.