உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறண்ட நிலையில் வாசீஸ்வரர் குளம்

வறண்ட நிலையில் வாசீஸ்வரர் குளம்

திருப்பாச்சூர் : திருப்பாச்சூரில், பராமரிப்பில்லாததால், வாசீஸ்வரர் கோவில் குளம் வறண்டு கிடப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும், துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, 20 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இதனால், கோவில் குளம் எப்போதும் நீரின்றி வறண்டே காணப்படும். சில தினங்களுக்கு முன் பெய்த மழையில்கூட ஒரு சொட்டு மழை நீர் கூட கோவில் குளத்தில் சேகரமாகவில்லை. இதற்கு கோவில் குளத்திற்கு வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போய் ஆக்கிரமிப்பில் உள்ளதே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த கோவில் குளம் போதிய பராமரிப்பில்லாததால், படிகள் மற்றும் குளத்தின் நடுவே உள்ள மண்டபமும், சிதலமடைந்து செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் காணப்படுகின்றன.ஹிந்து அறநிலையத் துறையினர் கோவில் குளத்தை முறையாக பராமரிக்காததே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து அறநிலைய துறையினர், வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !