தேவபாண்டலத்தில் மகா சண்டி ஹோமம்
ADDED :1900 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மகா சண்டி ஹோமம் நடந்தது. தேவபாண்டலம் கிராம ஏரிக் கரையில் துர்க்கையம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு 2ம் ஆண்டு ஸம்வத்ஸரா அபிஷேக தினத்தையொட்டி மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது. அதனையொட்டி, விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பூஜைகள் நடந்தது. பாண்டலம் ரவி குருக்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் சண்டி ஹோமம் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழு, பாண்டலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.