உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு

கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா, பி.வி. கோபாலன், துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகள் சியாமளாவின் மகள் தான், கமலா ஹாரிஸ்.இக்கிராமத்தில் உள்ள, தர்மசாஸ்தா கோவில், கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குல தெய்வ கோவில். இக்கோவிலில், அய்யனார் மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. துணை அதிபர் பதவிக்கு, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர், தேர்தலில் வெற்றி பெற, தர்ம சாஸ்தா கோவிலில், கிராம மக்கள் சார்பில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.கமலா ஹாரிஸ், தனக்கு பிடித்த உணவு எனக் கூறிய, இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், ஊர் முழுதும், கமலாவை வாழ்த்தி, பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !