குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க என்ன ஸ்லோகம்?
ADDED :1816 days ago
படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு,புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.