உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

ஊத்துக்கோட்டை கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

 ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை, செல்வ வினாயகர் கோவில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வினாயகர் சன்னதி, பஸ் நிலையம் அருகே உள்ள புற்றுக்கோவில் வினாயகர் சன்னதி. தொம்பரம்பேடு மஹா கால பைரவர் கோவில் வளாகத்தில் உள்ள சோதர வினாயகர் சன்னதி, தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில் உள்ள வினாயகர் சன்னதி.சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரசித்தி வினாயகர் சன்னதி ஆகியவற்றில் நேற்று, சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.முன்னதாக, வினாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !