சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் திருட்டு
ADDED :1801 days ago
சூலூர்: சூலூர் அருகே பழைமையான கோவிலில் கலசத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பழமை வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் நேற்று இரவு திருடி சென்றுள்ளனர். இன்று காலை பூஜை செய்யவந்த அர்ச்சகர், கலசம் திருடப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை தண்டு மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் நாகராஜ், சூலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.