உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் உயிர் பலியை தடுக்க எச்சரிக்கை பலகை

நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் உயிர் பலியை தடுக்க எச்சரிக்கை பலகை

மொடக்குறிச்சி: நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், உயிர் பலியை தடுக்க, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, காங்கயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில், புகழ் பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷம் கழிக்க நீங்க, பிரதான ஸ்தலமாக கருதப்படுகிறது. கோவில் வளாகம் காவிரி ஆற்றின் நடுவில் இருப்பதால், பக்தர்கள் செல்வதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் மூன்று கோடி ரூபாய் நிதியில், பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு தேவையான மணலை, ஆற்றிலேயே அள்ளினர். இதற்காக கோவில் முன்புறம், பல இடங்களில், இயந்திரம் மூலம் மணல் அள்ளினர். இதனால் ராட்சத பள்ளம் உருவானது. கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், காவிரி ஆற்றில் குளிக்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாத சிலர், ராட்சத பள்ளம் உள்ள பகுதியில் செல்லும்போது, குளிக்கும்போது, நீரில் மூழ்கி இறக்கின்றனர். இதை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மொடக்குறிச்சி தீயணைப்புத்துறை சார்பில், பக்தர்கள் குளிக்கும் இடம், கோவில் வளாகம் உள்ளிட்ட நான்கு இடங்களில், எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !