சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1808 days ago
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.திண்டுக்கல் பத்மகிரீஸ்வர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவு செல்வ விநாயகர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* அம்பாத்துரை: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிேஷகம், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. இதே போல், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயில், சோமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.