உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி யாகமும், பூஜைகள் நேற்று நடந்தது. நடராஜ மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவஜனம் ஆகியவற்றிற்கு பின் கும்ப கலசங்கங்களில் காலபைரவரை ஆவாகனம் செய்தனர். கால பைரவருக்கு உரிய சிறப்பு மந்திரங்கள் வாசித்தபின் யாகம் நடந்தது.27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அனைத்திற்கும் மகாசங்கல்பங்கள் செய்து பரிகார யாகம் பூர்த்தி செய்தனர். தொடர்ந்து 16 வகையான சிறப்பு அபிேஷகம் செய்தபின் கலசாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. காலபைரவருக்கு வடைமாலை சாற்றி, அரளி பூக்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. அம்பிகேஸ்வர குருக்கள் தலைமையிலான குழுவினர்கள் பூஜையினை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !