சுவாமி வீதி உலா வாகனம் ஒப்படைப்பு
ADDED :1808 days ago
வாலாஜாபாத் : சுவாமி வீதி உலா வாகனத்தை, கிராமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், சுவாமி வீதி உலா செல்வதற்கு, புதிதாக நான்கு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த வாகனத்தின் வெள்ளோட்டம், அக்., 16ம் தேதி நடந்தது. வாகனத்திற்கு, கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து, திருஷ்டி கழித்து வாகனத்தை வெள்ளோட்டம் பார்த்தனர்.இதையடுத்து, வாகனத்தை செய்து கொடுத்த நன்கொடையாளர் ஒருவர், நேற்று, கிராம மக்களிடம் வாகனத்தை ஒப்படைத்தார்.