உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி: கல்லுக்குறிக்கியில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடிக்கரையில், 300 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா ஊரடங்கால், குறைந்தளவே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக தேய்பிறை அஷ்டமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஆனால், கடந்த ஏழு மாதங்களாக பக்தர்களின் கூட்டம் குறைந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை மட்டும் நடந்து வருகிறது.

* அரூர், மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள, ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள காளியம்மன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !