நட்பு பாராட்டுவோம்
ADDED :1826 days ago
தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் அண்டைவீட்டாரைக் கண்டு கொள்வதில்லை. ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்ற பெயரால் சுயநலத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். சுயதேவைகளுக்கு மட்டும் ஓரிரண்டு வார்த்தகைளை மட்டும் பேசுவதுண்டு. ‘உங்க வீட்டில் கரண்ட் இருக்கா... நல்லதண்ணி இன்னைக்கு வரலையா என்பது போன்ற அத்யாவசிய தேவைக்கு மட்டும் உறவாடுகின்றனர். இதையும் தாண்டி சிலர் அண்டை வீட்டாருடன் எப்போதும் சண்டை, சச்சரவில் ஈடுபடுகின்றனர். இது இறைவனுக்கு எதிரான செயல். சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாமல் மனிதன் தனித்து வாழ முடியாது. ‘‘அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டுபவனே உண்மையான இறைநம்பிக்கையாளன். மேலும் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்’’ என்கிறார் நாயகம்.